என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஈரோடு கனி மார்க்கெட்
நீங்கள் தேடியது "ஈரோடு கனி மார்க்கெட்"
ஈரோடு மாநகராட்சி கனி மார்க்கெட்டில் ரூ.100 கோடி மதிப்பில் வணிக வளாகம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று சட்டசபையில் எம்.எல்.ஏ.தென்னரசு கோரிக்கை வைத்துள்ளார்.
ஈரோடு:
இந்தியாவில் தமிழகம் தொழில் துறையில் 3-வது இடத்தில் உள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9,10-ந் தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடத்தி அதில் வெற்றி கண்டவர் ஜெயலலிதா.
ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் ஜனவரி மாதம் 23, 34-ந் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த உள்ளார். இந்தியாவிலேயே தொழில் துறையில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வமும் முயற்சிகளை எடுத்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
ஈரோடு மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்தி கொடுத்த முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஈரோடு மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் செய்து கொடுத்துள்ளார்.
550 கோடி ரூபாய் மதிப்பில் ஊராட்சி கோட்ட குடிநீர் திட்டம், ரூ.64 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம், ரூ.130 கோடியில் 1,520 அடுக்குமாடி குடியிருப்புகள்.
ரூ.43 கோடியில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடம், ரூ.300 கோடியில் பெருந்துறை சாலையில் உயர்மட்ட மேம்பாலம். ரூ.18 கோடியில் புறவழிச்சாலை அமைக்கின்ற திட்டம் ஆகியவற்றை கொடுத்தற்காக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான சில கோரிக்கைகளையும் சட்டசபையில் பதிவு செய்து கொள்கிறேன். ஈரோட்டுக்கு ஒரு அரசு மகளிர் கல்லூரி வழங்க வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கிறேன்.
அதே போன்று ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை விரைவாக நடத்த வேண்டும். ஈரோடு மாநகராட்சி கனி மார்க்கெட்டில் ரூ.100 கோடி மதிப்பில் வணிக வளாகம் அமைத்து கொடுக்க வேண்டும்.
ஈரோடு-சத்தி சாலையை நான்கு வழிச்சாலையாகயும், பவானி சாலையை நான்கு வழிச்சாலையாகவும் மாற்றி கொடுக்க வேண்டும். அதே போல் ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டை ரூ.100 கோடி மதிப்பில் அடுக்குமாடி மார்க்கெட்டாகவும், ஈரோடு முனிசிபல் சத்திரத்திலுள்ள மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அங்கேயே அடுக்குமாடி குடியிருப்புகளும், ஈரோடு சி.என்.சி.கல்லூரியை அரசு கல்லூரியாகவும், ஈரோடு நடராஜா தியேட்டர் பகுதியிலுள்ள மரப்பாலம், குய்வன் திட்டு பகுதியில் உள்ள 396 அடுக்குமாடி குடியிருப்புகள் பழுதடைந்துள்ள நிலையில் உள்ளதால் இங்கு புதிய குடியிருப்பு கட்டிக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X